×

வேப்பம்பட்டு பகுதியில் பரபரப்பு சீட்டு பணம் வசூலித்து ரூ.4 கோடி மோசடி: தம்பதி உட்பட 3 பேர் தலைமறைவு

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த தம்பதி மஞ்சுளா(40), பிரேம்ஆனந்த் (45) மற்றும் உறவினர் விக்னேஸ்வரி (எ) அம்மு (30) ஆகியோர் தீபாவளி பண்டு, மளிகை பொருட்கள் சீட்டு, நகை பண்டு ஆகியவற்றை 10 ஆண்டுகளாக முறையாக நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக 300க்கும் மேற்பட்டவர்களிடம் சீட்டு பிடித்து சரிவர பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் பலமுறை அவர்களின் வீட்டிற்கு சென்று முறையிட்டனர். அப்போதெல்லாம் பணம் தருவதாக கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கடந்த 24ம் தேதி ஆகஸ்ட் மாதம் சீட்டு பணம் கட்டிய அனைவரும் பணத்தை திரும்ப தரக்கோரி, சீட்டு நடத்திய தம்பதியினர் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களுக்கு சொந்தமாக இரண்டு வீடு உள்ளது அதை, விற்று அனைவருக்கும் சேர வேண்டிய தொகையை கொடுத்து விடுகிறேன் என்று வாக்குறுதி அளித்ததுள்ளனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மாதம் 4ம் தேதி அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டை காலி செய்து குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒன்று திரந்தனர். மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மற்றும் அவரது உறவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க கோரியும் ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம் புகார் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது, பண மோசடி செய்த தம்பதி மற்றும் அவரது உறவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் புகார் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post வேப்பம்பட்டு பகுதியில் பரபரப்பு சீட்டு பணம் வசூலித்து ரூ.4 கோடி மோசடி: தம்பதி உட்பட 3 பேர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Tampati Manjula ,Preamanand ,Vigneswari ,Thiruvallur district ,Vepamputtu ,Dinakaran ,
× RELATED ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!!