
- கலைஞர் நூற்றாண்டு திமுக தெரு பிரச்சாரம்
- Kummidipoondi
- DMK தெரு
- கும்மிடிப்பூண்டி தெற்கு திமுக ஒன்றியம்
- நூற்றாண்டு திமுக தெரு பிரச்சாரம்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தெற்கு திமுக ஒன்றிய சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக தெருமுனை பிரசாரம் கூட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனை பிரசார கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ரமேஷ், கதிரவன், ஒன்றிய செயலாளர் மணிபாலன், பொதுகுழு உறுப்பினர்கள் குணசேகரன், வெங்கடாசலபதி, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, சுரேஷ்குமார் துர்கா வெங்கடேசன் புலியூர் புருஷோத்தமன் பிரபு நமச்சிவாயம், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை, மாவட்ட பொறியாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.
இதனை தொடர்ந்து, திமுக தலைமை பேச்சாளர்கள் சைதை சாதிக் மற்றும் தமிழ் சாதிக் ஆகியோர் திராவிட வரலாறு மற்றும் கலைஞருடைய சாதனைகள் பற்றி விளக்கி பேசினார். பின்னர், மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திமுக கொடி ஏற்றி வைத்து பேசியதாவது: கலைஞர் முதல்வரான பிறகு மனிதர்களை மனிதனே இழுத்துச் செல்லும் வகையிலான கைரிக்ஷாக்கள் அப்போது அதிகளவில் இருந்தன. மனிதனை மனிதனே மாடு போல இழுத்துச்செல்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்பதால் கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. அவற்றிற்குப் பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டது.
குடிசைகளில் வாழ்வோருக்கு நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்காக குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை கலைஞர் உருவாக்கி தொடங்கி வைத்தார். இதன் மூலம் பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. இத்திட்டமும் இந்திய அளவில் வரவேற்கப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, அண்ணா நூலகம், ஆங்காங்கே மேம்பாலம், அடித்தட்டு மக்களுக்கு சம உரிமை வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சம உரிமை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைச் செய்தவர் கலைஞர் என பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில், ஒன்றிய துணை செயலாளர் திருமலை நன்றியுரை கூறினார்.
The post கலைஞர் நூற்றாண்டு விழா திமுக தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.