×

ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள்: அகற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மலைபோல் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த மே மாதம் 1ம் தேதியன்று தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 3ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தது. இதுவரை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு 3 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது.

தண்ணீர் திறப்பதற்கு முன்பு கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்கள் ஆகியவைகளை ஆந்திர மற்றும் தமிழக குடிமகன்கள் குடித்து கால்வாயில் போட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது அந்த பாட்டில்கள் அணைத்தும் தண்ணீரில் அடித்து செல்கிறது. அப்படி செல்லும் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள பாலத்தில் சிக்கிக்கொள்கிறது. இதனால் தண்ணீர் சீராக செல்வதற்கு இடையூராக இருக்கிறது. எனவே, அணைக்கட்டு பகுதியில் சிக்கிய பாட்டில்களை அகற்றி, தடை இல்லாமல் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Krishna canal ,Poothukkota ,Poothukkotta ,Uthukkotta ,Euthukkotta ,Dinakaran ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு