
சென்னை: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகத்தை அகற்றிய பெண்களுக்கு இம்பிளான்ட் என்கிற மார்பக மறுசீரமைப்பு குறித்தான பயிலரங்கு எம்ஜிஎம் மருத்துவமனையில் நடந்தது.பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், புற்றுநோயியல் மருத்துவர்கள் மற்றும் பிற சிறப்பு மருத்துவர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் குழுவினரால் மார்பகத்தை அகற்றிய பெண்களுக்கு உட்பொருத்தி (இம்பிளான்ட்) அடிப்படையிலான மார்பக மறுசீரமைப்பு குறித்தான பயிலரங்கு நேற்று நடந்தது.
இதில், நார்த் ஸ்டார்ஃபோர்டுஷயரில் உள்ள யுனிவர்சிட்டி ஹால்ஸ்பிடல்ஸ்சின் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைசிகிச்சை நிபுணரான சங்கரன் நாராயணன், மார்பக அறுவை சிகிச்சை நிபுணரான அஷுதோஷ் கோத்தாரி, எய்ம்ஸ் நியு டெல்லியின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் எஸ்விஎஸ் டியோ, லங்காஸ்டரின் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல்ஸ் ஆப் மோர்கேம்ப்பின் டாக்டர் ரிஷிகேஷ் பரமேஸ்வர், சென்னை அப்போலோ கேன்சர் சென்டரின் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர் சி.எஸ்.மணி, புனே நகரின் ஆர்க்கிட்ஸ் ஹெல்த் சென்டரின் ஆன்கோபிளாஸ்டிக் மார்பக அறுவைசிகிச்சை சிறப்பு நிபுணர் சி.பி.கோபிகர், டாக்டர் பிரகன்யா சிக்குருபதி, டாக்டர் சஞ்சித் குமார் அகர்வால், டாக்டர் அஷுதோஷ் தன்டோர் மற்றும் டாக்டர் சபீக் சம்சுதீன் ஆகியோரும் பயிலரங்கில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனையின் மார்பக அறுவைசிகிச்சை நிபுணரும், பயிலரங்கை நடத்திய குழுவின் தலைவருமான டாக்டர் கீர்த்தி கேத்தரின் கபீர் கூறியதாவது: கடந்த இரு ஆண்டுகள் காலஅளவின்போது, 20, 30 மற்றும் 40 வயதுகளின் பிற்பகுதியிலுள்ள பெண்கள் மத்தியில் மார்பகம் தொடர்பான புற்றுநோய் நேர்வுகள் கணிசமாக அதிகரித்திருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்.
சிகிச்சைக்கான இடர் குறைக்கும் செயல்முறைகளில் மார்பக மறுசீரமைப்பு அறுவைசிகிச்சையில் உட்பொருத்திகளின் பயன்பாடு மீது சிறப்பு கவனம் செலுத்தும் அமர்வுகள் பயிலரங்கில் இடம்பெற்றன. உட்பொருத்தி அடிப்படையிலான அறுவைசிகிச்சை மீதான விழிப்புணர்வு ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது, எனவே சிகிச்சைக்கு பிறகு சிறப்பான தரத்துடன் வாழ்க்கையை நடத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய இந்த நவீன உத்தி பற்றி அறிவையும், விழிப்புணர்வையும் பரப்புவது மீது நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post புற்றுநோய் காரணமாக மார்பகத்தை அகற்றிய பெண்களுக்கு இம்பிளான்ட் சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.