×

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர இடத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார் நேரு: பா.ஜ குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்தியாவுக்கு வரவேண்டிய ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர இடத்தை நேரு சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டதாக பா.ஜ குற்றம் சாட்டி உள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஐநா சபை பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டெரஸ் கூறுகையில்,’ ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெற இந்தியா தகுதி உடைய நாடு தான். ஆனால் அதை நான் முடிவு செய்ய முடியாது. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற உறுப்பு நாடுகள் முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையில், சீனாவின் எதிர்ப்பால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்தியாவுக்கு கிடைத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர இடத்தை நேரு சீனாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டார் என்று பா.ஜ குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக பா.ஜ தனது டிவிட்டர் பதிவில்,’இன்று, பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா, உலகை வடிவமைத்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான நாட்டின் முயற்சியை உலகமே ஆதரிக்கிறது. ஆனால் அதை நேரு சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். காந்தி குடும்பத்தின் தேச பக்தியற்ற செயல்கள் இன்று வரை நமது வரலாற்றை ஆட்டிப்படைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர இடத்தை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தார் நேரு: பா.ஜ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : UN Security Council ,China ,Nehru ,New Delhi ,India ,Ja ,China Nehru ,Dinakaran ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...