×

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடு, கேரளா ஏற்காது: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவில் சாத்தியமில்லை என்பதால், தமிழகம், கேரள மாநிலங்கள் அத்திட்டத்தை ஏற்காது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்ெகாள்வது குறித்து ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தினோம்.

ஏற்கனவே, ெதாகுதி வாரியாக வாக்குச்சாடிவகள் அமைப்பது குறித்து கும்பகோணத்தில் கூட்டம் நடத்தினோம். தற்போது அதுபோன்ற கூட்டங்கள் 2 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு கூட்டம் என நடத்தப்படும். அதற்கான தேதி வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து சமூக மக்களுக்கும் பலன் கிடைப்பது இட ஒதுக்கீடு மூலம் தான். அதன்படி தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கூறியது போல தான் இருக்கும். இந்தியாவில் இது சாத்தியமில்லாதது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள் ஒருபோதும் இதை ஏற்றுகொள்ளாது. பிரதமர் மோடியின் சர்வாதிகாரம் ஒருபோதும் வெற்றி பெறாது.

அப்படியே அவர்கள் தேர்தல் நடத்தினாலும், அதிக வாக்குகளை பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் வருவார். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்பி, முன்னாள் எம்பிகள் ஜெ.எம்.ஆரூண், விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர்பொன். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர்கள் கே.சிரஞ்சீவி, தளபதி எஸ்.பாஸ்கர், எஸ்.ஏ. வாசு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எம்.பி.க்கள் டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், பழனி நாடார், எஸ்.டி.ராமச்சந்திரன், துரை சந்திரசேகர் ஹசன் மவுலானா, ஊர்வசி அமிர்தராஜ் இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை தமிழ்நாடு, கேரளா ஏற்காது: கே.எஸ். அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Kerala ,K.S. Alagiri ,Chennai ,India ,Tamil Nadu ,Kerala ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு