×

நாடாளுமன்ற தேர்தல் பணி கூட்டம்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணியை முன்னிட்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில், நகர செயலாளரும், நகரமன்ற தலைவருமான எம்.கே.டி கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜேந்திரன், நகர பொருளாளர் அப்துல்காதர், நகர துணை செயலாளர்கள் ராமமூர்த்தி, ஸ்ரீமதிராஜி, ஹரி, மாவட்ட பிரதிநிதிகள் டில்லி, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற துணை தலைவர் லோகநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கமலக்கண்ணன், பொறியாளர் அணி அமைப்பாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.  பின்னர், வருகிற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து சிறப்புரை ஆற்றினர். இதில், 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parliamentary Election Work ,Gooduwancheri ,Nandiwaram- Goduwancheri ,Dizhagam ,Dinakaran ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம்...