×

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஸ்ரீபெரும்புதூர்: குண்ணம் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுசூழல் அணி மாவட்ட தலைவர் கு.ப.முருகன் வரவேற்றார். ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன் கலந்துகொண்டு, 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் பாபு, மாவட்ட அமைப்பாளர்கள் செந்தில் தேவராஜன், எல்.டி.ஜார்ஜ், அருண் பாரத், ஒன்றிய நிர்வாகிகள் மோகனன், நேரு, பரமசிவன், இளைஞர் அணி நிர்வாகி மனோஜ்குமார், மாணவரணி நிர்வாகிகள் டான்போஸ்கோ, புகழ்வாணன், போந்தூர் சரவணன், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் ஓவியா முருகன், ஆதித்ய முருகன், கிளை செயலாளர்கள் கஜேந்திரன், திலிப்குமார், வேலு, ஜோதிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Kunnam village ,Sriperumbudur South Union DMK ,
× RELATED பல்வேறு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது