×

உ.பி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாலைகளில் மழைநீர் தேங்குவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதை காட்டுகிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், சாலைகளில் மழை நீர் தேங்குவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதை காட்டுவதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “தலைநகர் லக்னோ உள்பட முக்கிய நகரங்கள் மற்றும் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கி உள்ளன. மேலும் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. மாநில மக்களுக்கு கனவுகளை மட்டும் காட்டிய பாஜ அரசு உண்மையான களத்தில் எதையும் செய்யவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 4 பேர், நீரில் மூழ்கி 2 பேர் உள்பட மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 19 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள ஸ்மார்ட் சிட்டிகளின் சாலைகளில் மழை நீர் தேங்குவது பாஜ அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதை காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

The post உ.பி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு: அகிலேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Akilesh ,Lucknow ,Uttar Pradesh ,Akilesh Yadav ,Akilish ,
× RELATED அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி