சியோல்: ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று சந்திப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகொரியாவும், ரஷ்யாவும் அமெரிக்காவுடனான தனது மோதல்களை எதிர்கொள்ளும் வகையில் தங்களது ஒத்துழைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அதிபர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்திக்க உள்ளதாகவும் கடந்த வாரம் உளவு துறை தகவலின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளின் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேற்று முன்தினம் மாலை ரயிலில் புறப்பட்டு சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாட்டின் தலைவர்களும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக தென் கொரிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு உளளன.
The post ரஷ்யாவுக்கு ரயிலில் சென்றார்; புதினுடன் கிம் ஜாங் உன் இன்று சந்திப்பு? appeared first on Dinakaran.