×

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை இணைத்தால் பெருமையடைவோம்! துருக்கி அதிபரின் கருத்தால் ஆச்சரியம்

புதுடெல்லி: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை இணைத்தால் நாங்கள் பெருமையடைவோம் என்று துருக்கி அதிபர் கூறிய கருத்து பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில், சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவையும் இணைக்க வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா போன்ற நாடு நிரந்தர உறுப்பினராக இருந்தால், எங்கள் நாடு பெருமையடையும். நிரந்தர உறுப்பினர் அல்லாத அனைத்து உறுப்பினர் நாடுகளுக்கும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இருக்கும் ஐந்து நாடுகளை காட்டிலும் உலகம் மிகப்பெரியது. இந்த நாடுகளை மட்டும் பாதுகாப்பு கவுன்சிலில் பார்க்க விரும்பவில்லை’ என்றார். முன்னதாக காஷ்மீர் போன்ற பிரச்னைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி அதிபர் கருத்து கூறிய நிலையில், தற்போது இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பதை பார்த்து பல நாடுகளும் ஆச்சரியப்படுகின்றன.

The post ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை இணைத்தால் பெருமையடைவோம்! துருக்கி அதிபரின் கருத்தால் ஆச்சரியம் appeared first on Dinakaran.

Tags : GI ,India ,Na Security Council ,Turkey ,New Delhi ,President of ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!