
திருச்சி: மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான பல்வேறு கலைப்போட்டிகள் இன்று நடந்தது. இதில் ஜுனியர் பிரிவில் 3 முதல் 5ம் வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை ஒப்புவித்தல், யோகா மற்றும் பாட்டு போட்டியும், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை எழுதுதல், வினாடி வினா, கடிதம் எழுதுதல் உள்ளிட்ட அனைத்து வகை போட்டிகளும் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படுகிறது.
The post பாரதியாரின் நினைவு நாள்: திருச்சியில் கலைப்போட்டிகள் 1000 மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.