×

டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

டிவிஎஸ் நிறுவனம், அதிக திறன் கொண்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரிைசயில், இது அதிக பிரீமியம் ஸ்கூட்டராக கருதப்படுகிறது. மேக்ஸி ஸ்கூட்டராக வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த வாகனக் கண்காட்சியில் கிரியான் என்ற பெயரில் இந்த ஸ்கூட்டரை டிவிஎஸ் காட்சிப்படுத்தியது. இதில் 4.44 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 140 கி.மீ தூரம் வரை செல்லும்.

இதன்மூலம் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் செய்யலாம். ரேபிட் சார்ஜரில் 50 சதவீதம் அளவுக்கு 50 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதிகபட்சமாக 11 கிலோவாட் அவர் பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 105 கி.மீ வேகம் வரை செல்லும். பிரீமியம் ஸ்கூட்டர் என்பதற்கு ஏற்ப, ஷோரூம் விலை ரூ.2,49,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு பேம் திட்டத்தின் கீழ் மானியச் சலுகை பெற முடியாது.

The post டிவிஎஸ் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Tags : TVS X ,TVS ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...