×

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்?: கி.வீரமணி

சென்னை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை கொண்டுவர சட்டம் கொண்டு வருவார்களா?. மோகன் பகவத்துக்கு திடீரென சமூகநீதி, ஒடுக்கப் பட்டோருக்கான இடஒதுக்கீடு மீது திடீர் பற்று, பாசம் பொங்கி வழிகிறது.

2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி.,க்கு இடஒதுக்கீடு அவசியம் என மோகன் பகவத் தெரிவித்திருந்தார். சனாதனம் ஏற்படுத்திய கொடுமையை நேரிடையாக இல்லாவிடிலும் மறைமுகமாக ஒப்புக்கொள்வதாக மோகன் பகவத் பேசியுள்ளார். தற்போதைய இடஒதுக்கீட்டை ஒழிப்பதையே தொடக்கத்தில் இருந்து கூறிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.. மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சியின் சரிவு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்பது மோகன் பகவத்துக்கு தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக மோகன் பகவத் பேசியதாவது,

சமூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகவத், சில சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு அவர்கள் மற்ற மக்களுக்கு சமமாக மாறும் வரை தொடரப்பட வேண்டும் என்று கூறினார். கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளித்த மோகன் பகவத், 2000 ஆண்டுகளாக ஒரு பிரிவு மக்கள் அனுபவித்த பாகுபாடுகளை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

பாகுபாட்டை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படும் வரை அவர்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் அவசியம் என்ற மோகன் பகவத், அதில் இட ஒதுக்கீடும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இடஒதுக்கீடு என்பது ஒரு பிரிவினரின் நிதி அல்லது அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வது மட்டுமல்ல, அவர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதும் கூட என்றும் அவர் கூறினார். அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடுகளை ஆர்.எஸ்.எஸ். முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்?: கி.வீரமணி appeared first on Dinakaran.

Tags : President ,Mohan Bhagavat ,Veeramani ,R. ,S.S. ,BC ,Supreme Court ,
× RELATED உச்சநீதிமன்றத்தின் கருத்து, தெளிவுரை...