×

ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும்: கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை

சேலம்: ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்ற தனியார் விழாவில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடராஜன், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளுமே சவால் நிறைந்ததாக உள்ளன. இருப்பினும், நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்புகள் அதிகம் இருக்கிறது. இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறாதது மற்றவர்களை போலவே எனக்கும் வருத்தம் அளிக்கிறது. இளம் வீரர்கள், அனுபவம் வாய்ந்த பலருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சொந்த மண்ணில் விளையாடுவதால் அதிக நெருக்கடி இந்திய அணிக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதை மட்டும் சமாளித்து விட்டால் இந்திய அணி உலக கோப்பையை வென்று விடும் என்பது உறுதி என்றார்.

The post ஒரு நாள் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும்: கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Indian Cricket Team ,World Cup ,Natarajan ,Salem ,World Cup.… ,Dinakaran ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை...