×

தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை திருத்தி அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை திருத்தி அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை (நிலை) எண். 48, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ப.மே1) துறை, நாள் 2007 ஏப்ரல் 20ன் படி உரிய ஆணைகள் வெளியிடப்பட்டது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை தலைவராகக் கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே1(2) துறை, நாள் 2023ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதியில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட நலவாரியத்தில் பழங்குடியின மக்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உதவித் தொகை வழங்குவதற்கும், பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியத்தை திருத்தி அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Aboriginal Welfare Board ,Government of Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Tamil Nadu Tribal Welfare Board ,Government of Tamil Nadu Govt. ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...