×

திருநெல்வேலியில் குடிநீர் கேட்டு மக்கள் நூதன போராட்டம்: காலி குடங்களை சாலையோர மரத்தில் தூக்கிலிட்டு எதிர்ப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ஆணைப்புரம் கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களை மரத்தில் தூக்கிலிட்டு கிராம மக்கள் நூதன போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாவட்டம் பருத்திப்பாடு பஞ்சாயத்திற்குட்பட்ட ஆணைபுர கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

ஆனால், 2 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் அவர்கள் காலி குடங்களை சாலையோர மரத்தில் தூக்கிலிடும் போராட்டம் நடத்தினர். தங்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆணைபுரம் கிராம மக்களின் கோரிக்கையாகும். ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ஒரு வருடத்திற்கு முன் ஆணைபுர கிராமத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post திருநெல்வேலியில் குடிநீர் கேட்டு மக்கள் நூதன போராட்டம்: காலி குடங்களை சாலையோர மரத்தில் தூக்கிலிட்டு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Nudana ,Thirunelveli ,Nutana ,Dinakaran ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி..!!