×

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைப்பு

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்காக அழைக்கபட்டுள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் விசாரணை நடைபெறவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குளறுபடி காரணமாக டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, பார்க்கிங் வசதி தொடர்பாக விசாரணை நடத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து தாம்பரம் காவல் ஆணையர் அளித்த பேட்டியில்:
இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. எதிர்காலத்தில் இப்படிப்பட்ட இடத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தலாமா என்பது குறித்து முடிவு செய்ய ஆய்வு நடத்தபட்டது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வரும் காலத்தில் பிரச்சனை இல்லாமல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்தார்.

The post ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி தொடர்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விசாரணைக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : PA ,R.R. Rahman ,A. R.R. ,Rahman ,Thambaram City of Gujarat ,
× RELATED பா.வளர்மதி மீதான சொத்துகுவிப்பு...