×

கல்லணை காவிரியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாக குளியல்

திருக்காட்டுப்பள்ளி : கல்லணை காவிரியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாமாக குளித்து மகிழ்ந்தனர்.திருக்காட்டுப்பள்ளி அருகே சுற்றுலாத்தலமாக கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. இங்கு காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய ஆறுகள் செல்கின்றன. தஞ்சை டெல்டா விவசாய பாசனத்திற்காக இந்த ஆறுகளில் முறைவைத்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அதுபோல கடந்த ஒரு சில தினங்களாக காவிரியில் முறைவைக்கப்பட்டு தற்பொழுது தண்ணீர் திறந்து விவசாய பாசனத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஞயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரம் கணக்கான சுற்றுலாப்பயணிகள் குடும்பம் குடும்பமாக வந்து கல்லணையில் உள்ள கரிகாலன் பூங்கா, கரிகாலன் மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்தனர்.குடும்பத்துடன் வந்தவர்கள் தங்கள் குழந்தைகளை சிறுவர் பூங்காவில் உள்ளராட்டினங்கள், படகுசவாரி போன்ற விளையாட்டு சாதனங்களில் தங்களது விளையாட விட்டு மகிழ்ந்தனர். அதன்பிறகு காவேரியில் பொங்கி ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரில் இளைஞர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

The post கல்லணை காவிரியில் சுற்றுலாப்பயணிகள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : Kallana Cauvery ,Thirukkattupalli ,Kallanai ,Cauvery ,Tirukatupalli ,Karikalan ,Kallanai Cauvery ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா