×

ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இரண்டாவது சீசன் காலமாகும்.இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வடமாநிலங்களை சேர்ந்த புதுமண தம்பதிகள் வருவார்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக வார நாட்களை காட்டிலும் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகமாக உள்ளது. இதனால் இரண்டாவது சீசன் மெல்ல மெல்ல களை கட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை புரிந்திருந்தனர். இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் கூட்டம் காணப்பட்டது.

அதற்கேற்றார் போல் இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா தளங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் கூட்டம் காணப்பட்டது. ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்ய அதிக ஆர்வம் காட்டினார்கள். பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்டவை களை கட்டியிருந்தன. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது.

The post ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,
× RELATED ஊட்டியில் கனமழையால் பாறைகள் சரிந்து விழுந்தன: மலை ரயில் 2 நாட்கள் ரத்து