×

இந்திய கனிம ஆய்வு நிறுவனத்தில் கிளார்க், டெக்னீஷியன்கள்

இந்திய கனிம ஆய்வு நிறுவனத்தில் கிளார்க், டெக்னீஷியன்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1Accountant: 6 இடங்கள் (ஒபிசி-2, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.22,900-55,900. தகுதி: இளநிலை/முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் சிஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2Hindi Translator: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.22,900-55,900. தகுதி: இந்தி பாடத்தில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3Technician: (Survey & Draftsman): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சர்வே மற்றும் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
4Technician (Sampling): 10 இடங்கள். (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
5Technician (Laboratory): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1). தகுதி: Chemistry/Physics/Geology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி.
6Assistant (Materials): 5 இடங்கள் (எஸ்சி-3, எஸ்டி-2). தகுதி: கணிதம் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பி.காம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கில டைப்பிங்கில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

7Assistant (Accounts): 4 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: பி.காம் தேர்ச்சி.
8Assistant (HR): 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1). தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்தில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
9Assistant (Hindi): 1 இடம் (எஸ்சி). தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் இந்தியில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
10 Electrician: 1 இடம் (ஒபிசி): தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி. மேலும் வயர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பணி எண்- 3 லிருந்து 10 வரைக்கான சம்பளம்: ரூ.20,200-49,300. எழுத்துத் தேர்வு, ஸ்கில்/டிரேட் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ₹100/. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
https://www.mecl.co.in/careers.aspx அல்லது meclrecruitment.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.09.2023.

The post இந்திய கனிம ஆய்வு நிறுவனத்தில் கிளார்க், டெக்னீஷியன்கள் appeared first on Dinakaran.

Tags : Clark ,Indian Institute of Mineral Research ,Indian Institute of Mineral Studies ,Indian Institute of Mineral Exploration ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...