×

விஜயவாடாவில் துர்கை அம்மன் குன்றில் மண்சரிவு: சாலையோரம் மண் சரிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் என்.டீ.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் உள்ள துர்கை அம்மன் கோவில் உள்ள சாலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சாலையின் வழியாக எந்த வித வாகனங்களும் வராததால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இருந்தாலும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

The post விஜயவாடாவில் துர்கை அம்மன் குன்றில் மண்சரிவு: சாலையோரம் மண் சரிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Durgai Amman hill ,Vijayawada ,Andhra Pradesh ,Vijayawada, ,NTR ,Andhra State ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பள்ளி குழந்தைகளை...