×

இமானுவேல் சேகரனார் நினைவு நாள் : போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாளில், அவரது போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன்.

பொதுமக்கள் மற்றும் தியாகி இமானுவேல் சேகரனாரின் வழித்தோன்றல்களின் கோரிக்கையின்படி, அன்னாரின் நூற்றாண்டையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post இமானுவேல் சேகரனார் நினைவு நாள் : போராட்ட வாழ்வையும் சமூகப் பங்களிப்பையும் நினைவு கூர்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Emanuel Sekarnar Memorial Day ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Emanuel Sekarnar ,CM ,
× RELATED அனைவரும் இணைந்து பணியாற்றி இயற்கை...