×

ஜோர்டான் தலைநகரில் நடைபெற்ற சோப்பு டப்பா கார் பந்தயம் … காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது!!

அம்மான் : ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் நடைபெற்ற கோமாளி கார் அல்லது சோப்பு டப்பா கார் பந்தயம் காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரெட் புல், சோப்பு டப்பா கார் பந்தயம் என்ற கோமாளி கார் பந்தயம் கடந்த 2000ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் இந்த சோப்பு டப்பா கார் பந்தயம் நடைபெற்றது. கோமாளி தனம் நிறைந்த இந்த கார் பந்தயத்தில் பங்கேற்கும் கார்களுக்கு எஞ்சின் இருக்காது.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் மனதிற்கு பிடித்தபடி வடிவமைக்கலாம். ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரில் நடைபெற்ற பயிற்சி பந்தயத்தில் 40 குழுக்கள் பங்கேற்றனர். சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் மோதிய போதும் திறமையாக எல்லைக் கோட்டை அடைந்தவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் சில கார்கள் தடுப்புகளில் மோதி, சாலையிலேயே கவிழ்ந்தன. ஒரு போட்டியாளர் ஆடு வடிவத்தில் காரை வடிவமைத்து பார்வையாளர்களை கவர்ந்தார். அமெரிக்கா, ஜோர்டான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் ரெட் புல் சோப்பு டப்பா கோமாளி கார் பந்தயம் கடந்தஹ் 2011ம் ஆண்டு இந்தியாவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

The post ஜோர்டான் தலைநகரில் நடைபெற்ற சோப்பு டப்பா கார் பந்தயம் … காண்போரை உற்சாகத்தில் ஆழ்த்தியது!! appeared first on Dinakaran.

Tags : Jordan ,Amman ,Dinakaran ,
× RELATED வெள்ளிக்கிழமை: அருள் தரும் அங்காள அம்மன் வழிபாடு..!!