×

நவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகும் வட மாநிலங்கள்: குஜராத்தில் கர்பா நடன ஒத்திகையில் திரளானோர் பங்கேற்பு

காந்திநகர்: நவராத்திரி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு குஜராத்தில் கர்பா நடன நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை கலைக்கட்டியுள்ளது. நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துக்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. நவராத்திரி அம்பாளுக்கு மிகவும் விருப்பமான பண்டிகை. பகலும், இரவுமாக ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம். ஆண்டுக்கு நான்குமுறை நவராத்திரி வந்தாலும் புரட்டாசி அமாவாசைக்குப் பின் வரும் சாரதா நவராத்திரியைத்தான் இமயம் முதல் குமரி வரை கொண்டாடுகிறார்கள்.

இதில் விஜய தசமி, தசரா, துர்காபூஜை, குலு தசரா என பல்வேறு மாநிலங்களில் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகிறது. நவராத்திரி கொண்டாடட்டம் நெருங்கி வரும் நிலையில் வடமாநிலங்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளனர். குறிப்பாக குஜராத்தில் நவராத்திரியின் போது அரங்கேறும் கர்பா நடனத்திற்கான ஒத்திகைகள் கலைக்கட்டியுள்ளன. குஜராத் மக்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து கர்பா நடனம் ஆடுவது வழக்கம். நவராத்திரியில் 9 நாள் கொண்டாட்டத்திலும் இந்த கர்பா நடனம் இடம்பெறும்.

The post நவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகும் வட மாநிலங்கள்: குஜராத்தில் கர்பா நடன ஒத்திகையில் திரளானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Northern states ,Navratri ,Karba ,Gujarat Gandhinagar ,Gujarat ,Hindus ,Navaratri ,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...