×

மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும்: சேலம் கோட்ட ரயில்வே தகவல்

ஊட்டி: மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்.16, 30 மற்றும் அக். 21, 23-ம் தேதிகளில் விடுமுறை கால சிறப்பு மலை ரயிலை இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரயில் மதியம் 2.25-க்கு உதகை சென்று சேரும். மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே முதல் வகுப்பில் 40 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளும், குன்னூரில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், 2-ம் வகுப்பில் 140 இருக்கைகளும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

The post மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு விடுமுறை கால சிறப்பு ரயில் 4 நாட்களுக்கு இயக்கப்படும்: சேலம் கோட்ட ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Utkai ,Salem Division Railway ,Udkai ,Salem division ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்