×

நெல்லை மாநகரில் பழுதான சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு

நெல்லை : தொடர்மழையால்  நெல்லை மாநகரில் சேதமான சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக  சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.நெல்லை   மாவட்டம் மற்றும் மாநகரில் கடந்த 26ம்தேதி முதல் வடகிழக்கு பருவமழை  இடைவிடாமல் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை அளவு குறைந்துள்ளது.  தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்கனவே சேதமடைந்திருந்த மாநகர சாலைகள் மேலும்  சேதமடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள், பழுதான சாலையில் தட்டு தடுமாறி  செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில்  நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். டவுன்  ஆர்ச் அருகில் வரை ஜல்லி மற்றும் சரள் மண் நிரப்பி சாலையை சீரமைத்தனர்.  இதுபோல் நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள சேரன்மகாதேவி  சாலை சீரமைக்கும் பணியும் நடந்தது. பாதாள சாக்கடை மற்றும்  குடிநீர் திட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னர் இந்த சாலை உள்ளிட்ட  நெடுஞ்சாலைத்துறையின் மாநகர சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் என  நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். மாநகரில் பழுதான சாலைகள்  தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர்.தற்காலிக பஸ் நிலையங்களில் பள்ளங்கள்நெல்லை  மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 3 பஸ் நிலையங்கள் புதியதாக  கட்டும் பணி மும்முரமாக நடக்கிறது. பெருமாள்புரம் ஆம்னி பஸ் நிறுத்தத்திலும் இதன் அருகே போலீஸ் நிலையம் எதிரிலும் தற்காலிக பஸ்  நிலையங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக இயங்குகிறது. இந்த பஸ்  நிலையங்களில் போதிய அடிப்படை வசதியில்லை. பெரும்பாலும் மண் தளமாக  இருப்பதால் தொடர் மழைக்கு பிறகு அதிகளவில் மேடுபள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.  இதில் பஸ்கள் தொடர்ச்சியாக செல்வதால் மேலும் பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதனால் பஸ்கள் தடுமாறி செல்கின்றன. நகர பஸ்களும் மிதவை பஸ்கள் போலகுலுங்கி சரிந்து செல்கின்றன. பயணிகள் நிற்கும் பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதால் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த இரு தற்காலிக  பஸ்நிலையங்களிலும் ஏற்பட்டுள்ள மேடுபள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் மழை நேரத்தில்  ஒதுங்கி நிற்க பயணிகள் நிழற்கூடங்கள் அமைக்கவேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்….

The post நெல்லை மாநகரில் பழுதான சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : paddy ,Nedal ,Paddy City ,Dinakaran ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் நெல் திருவிழா