
டெல்லி: ஜி20 மாநாட்டை நடத்த ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 300% அதிகமாக மோடி அரசு செலவு செய்துள்ளது. ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்ற முதல் நாள் மாநாட்டில், ஜி20 பிரகடனம் எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதோடு, இந்தியாவின் கோரிக்கைப்படி, ஜி20 அமைப்பில் 55 நாடுகளின் கூட்டமைப்பான ஆப்ரிக்க யூனியனும் இணைக்கப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாடு நேற்று நிறைவு பெற்றது. இதனிடையே நேற்று ஜி20 மாநாடு நடந்த பாரத் மண்டபத்தில் தண்ணீர் தேங்கியது விமர்சனத்துக்குள்ளாக்கியது.
இந்நிலையில் ஜி20 மாநாட்டை நடத்த ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட 300% அதிகமாக மோடி அரசு செலவு செய்துள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகெட் கோகலே குற்றம் சாட்டினார். ஜி20 மாநாட்டை நடத்த பட்ஜெட்டில் ரூ.990 கோடி ஒதுக்கிய நிலையில் ரூ.4,100 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டுக்காக ரூ.3,110 கோடி அதிகமாக ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது. மோடி அரசின் விளம்பரம் உள்ளிட்ட தேவை இல்லாத செலவுகளுக்காக ரூ.3,110 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாத செலவு ரூ.3,110 கோடியை ஏன் பாஜக வழங்கக்கூடாது எனவும் சாகெட் கோகலே கேள்வி எழுப்பினார்.
The post ஜி20 மாநாடு: பட்ஜெட்டில் ரூ.990 கோடி… செலவு செய்தது ரூ.4,100 கோடி.. தேவையில்லாத செலவு ரூ.3,110 கோடியை ஏன் பாஜகவழங்கக்கூடாது?… திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.