×

சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை இருசக்கர வாகன ஓட்டுநர் கைது..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை இருசக்கர வாகன ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், நேற்று ராயப்பேட்டை வி.எம். தெருவில் உள்ள தனது சகோதரரை பார்க்க ஆப் மூலம் வாடகை இருசக்கர வாகனத்தில் புக்கிங் செய்துள்ளார். சிறிது நேரத்தில் சூளைமேட்டுக்கு வந்த ஒரு நபர், அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது இளம்பெண்ணிடம் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

தொடர்ந்து ராயப்பேட்டை வந்து இறங்கியதும் அந்த இளம்பெண்ணை கட்டிபிடிக்கவும் ஓட்டுநர் முயற்சி செய்துள்ளார். உடனடியாக அந்த பெண் தனது சகோதரருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பெண்ணின் சகோதரர், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மதுராந்தகத்தை சேர்ந்த வாகன ஓட்டுனர் ரமேஷை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். தற்போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமேஷை கைது செய்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வாடகை இருசக்கர வாகன ஓட்டுநர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Rayapet, Chennai Chennai ,Rayapet, Chennai ,
× RELATED சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை...