×

திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக பலி. டயர் பஞ்சர் ஆனதால் ஏற்பட்ட கொடூரம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள் உயிரிழந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஓணான் குட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் 45 பேர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவிற்கு 2 நாட்கள் சுற்றுலாவுக்கு சென்றுள்ளனர். இரவு சுற்றுலா முடித்துவிட்டு திருப்பத்தூரை நோக்கி வேனில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேனின் டயர் பஞ்சராகியது.

வேனில் வந்தவர்கள் கீழே இறங்கி நெடுஞ்சாலை தடுப்புச்சுவர் அருகே அமர்ந்திருந்தனர். இந்த சமயத்தில் அவ்வழியாக வந்த மினி லாரி பஞ்சராக நின்றிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியது அங்கே அமர்ந்து இருந்தவர்கள் சுதாரித்து எழுந்தரிக்கும் முன் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்பட்டு உள்ளது. லாரியை கண்டதும் பெண்கள், ஆண்கள் சிலர் எழுந்து ஓட முயன்று உள்ளனர். இருப்பினும் ஏழு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அத்துடன் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பத்தூர் அருகே சாலை விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக பலி. டயர் பஞ்சர் ஆனதால் ஏற்பட்ட கொடூரம் appeared first on Dinakaran.

Tags : Thirupattur ,Thirupathur ,Chanteur ,Thirupathur district ,Vadrampalli Chanteur ,Tiruppattur ,Thirupatur ,
× RELATED டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி: திருப்பத்தூர் அருகே சோகம்