×

நந்திமங்கலம் கொல்லாபுரி அம்மன் கோயிலில் 108 பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி

 

ஊத்துக்கோட்டை, செப். 11: ஊத்துக்கோட்டை அருகே நந்திமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த கொல்லாபுரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. பின்னர் தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜையும் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த 108 பெண்கள் கிராம எல்லையில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கொல்லாபுரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலும் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

The post நந்திமங்கலம் கொல்லாபுரி அம்மன் கோயிலில் 108 பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nandimangalam Kollapuri Amman Temple ,Uthukottai ,Kollapuri Amman Temple ,Nantimangalam ,Oothukottai ,Nandimangalam ,
× RELATED தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்...