×

ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க 21ம் ஆண்டு துவக்க விழா: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

 

மதுராந்தகம், செப்.11: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் 21ம் ஆண்டு துவக்க விழா, அதன் தலைவர் கோ.ப.அன்பழகன் பிறந்தநாள் விழா, பங்காரு அடிகளாரின் 83ம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் விவேகானந்தர், பாரதியார் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் மாபெரும் மக்கள் தூய்மை பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதன் துவக்கவிழா, மதுராந்தகம் போலீஸ் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் வழக்கறிஞர் அகத்தியன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி சிவசக்தி, ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், மருத்துவர் பிரவீன் குமார், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, சிலாவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி பாலு, தொழிலதிபர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, மதுராந்தகம் டிஎஸ்பி அலுவலக வளாகம், ஊராட்சி ஒன்றியம் அலுவலக வளாகம், மதுராந்தகம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, கடப்பேரி சிறுவர் பூங்கா, இந்து ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு மின் விசிறிகள், மின் விளக்குகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், மதுராந்தகம் மருத்துவமனை அருகே நிழற்குடையை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நலிந்தோருக்கு மிதிவண்டிகள், காஸ் அடுப்பு, டியூப் லைட்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள்கள் போன்றவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர் கலந்து கொண்டு சுகாதார மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மூலம் 300க்கும் மேற்பட்டோர் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது மதுராந்தகத்தில் உள்ள வேளாண்மை துறை, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுகாதார மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தினர் செய்திருந்தனர்.

The post ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க 21ம் ஆண்டு துவக்க விழா: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Adiparashakti Spiritual People ,Charitable Foundation ,21st Year Inaugural Ceremony ,Madhurantagam ,Melmaruvathur ,Adiparasakthi ,Spiritual ,People's Charity Movement 21st Year Inauguration Ceremony ,
× RELATED உத்திரகோசமங்கையில் வடமாடு மஞ்சு விரட்டு