- அறிவியல் கண்காட்சி
- நத்தம் பள்ளி
- நத்தம்
- மாணவர் திறன் அறிவியல் கண்காட்சி
- நத்தம் கோவில்பட்டி மீனாட்சி
- பதின்முறை
- பள்ளி
- கண்காட்சி
- நத்தம் பள்ளி
- தின மலர்
நத்தம், செப். 11: நத்தம் கோவில்பட்டி மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர் திறன் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை பள்ளியின் முதல்வர் சத்தியா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சுற்றுச்சூழல் அறிவியல், விண்வெளி அமைப்பு, விண்கலம், விபத்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு கருவிகள்,ஆங்கில சொற்களஞ்சியம், கணித பயன்பாடுகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவர்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சண்முகவள்ளி, அபிராமி, அப்பணசாமி, விஜி, அர்ச்சனா செய்திருந்தனர். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழையும் பள்ளியின் முதல்வர் சத்யா வழங்கினார் .
The post நத்தம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.