×

ராகுல் நடைபயணம் நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு:தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணி

 

ஈரோடு, செப்.11: ராகுல் நடைப்பயண நிகழ்வு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று பேரணி நடத்தினர். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணம் என்ற ‘பாரத் ஜோடோ யாத்ரா’ நிகழ்ச்சியை துவக்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து துவங்கிய இப்பயணத்தை காஷ்மீர் வரை 4,080 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியின் ஓராண்டை நினைவு கூறும் வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது.

ஈரோடு பூந்துறை ரோடு, செட்டிபாளையம் பிரிவில் தொடங்கிய இப்பேரணிக்கு காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை வகித்தார். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணி, பழனிச்சாலை, ரிங் ரோடு வழியாக சென்று ஆனைக்கல்பாளையத்தில் நிறைவடைந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

The post ராகுல் நடைபயணம் நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு:தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணி appeared first on Dinakaran.

Tags : Rahul ,South District Congress ,Erode ,Erode South District Congress Party ,
× RELATED மபி, சட்டீஸ்கர், ராஜஸ்தானில் மக்கள்...