×

தார் சாலை பணி துவங்க வேண்டும் திருத்துறைப்பூண்டியில் லோக் அதாலத்தில் 377 குற்ற வழக்குகளுக்கு தீர்வு

 

திருத்துறைப்பூண்டி, செப். 11: திருத்துறைப்பூண்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் மற்றும் உரிமையியல் நீதிபதி (பொ) நீதித்துறை நடுவர் அருண் மற்றும் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் பொற்செழியன் மற்றும் பாலமுரளி, அரசு வழக்கறிஞர் பாஸ்கர், மூத்த வழக்கறிஞர் தர்மராஜன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அருள் செல்வன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் மூன்று காசோலை வழக்குகள் ரூ.10 லட்சத்து 80 ஆயிரத்திற்கு தீர்வு காணபட்டது. சிவில் வழக்குகள் 2ம், குடும்ப வன்முறை வழக்கு ஒன்றும், குற்றவியல் வழக்குகள் 377ம் முடிக்கப்பட்டது அபராதமாக ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் சார்பு நீதிமன்றத்தில் 4 மோட்டார் வாகன விபத்து வழக்கு முடிக்கப்பட்டு, ரூ.12 லட்சத்து 37 ஆயிரத்து 500 தீர்வு காணபட்டது. ஒரு பாக பிரிவினை தீர்வு காணபட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு தன்னார்வலர் கருணாநிதி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

The post தார் சாலை பணி துவங்க வேண்டும் திருத்துறைப்பூண்டியில் லோக் அதாலத்தில் 377 குற்ற வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Athalam ,Tiruthurapundi ,Thirutharapoondi ,National People's Court Circle Legal Work Committee ,Thiruthurapundi Integrated Court Complex ,Thiruthurapundi ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்