×

மையவாடிக்கு இடம் தேவை: அமைச்சர்களிடம் மனு

 

மதுரை, செப். 11:மதுரை ஆனையூர் சிலையனேரி மிஸ்ஜிதே இப்ராகீம் தொழுகை பள்ளிவாசல் தலைவர் பாபுஜி தலைமையில் நிர்வாகிகள் அமைச்சர்கள் பி.மூர்த்தி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘‘எங்கள் பள்ளிவாசலுக்கு உட்பட்டு 1300 குடும்பத்தினர் உள்ளனர். யாரேனும் இறந்தால் நல்லடக்கம் செய்ய 10 கி.மீ தொலைவிலுள்ள மகபூப்பாளையம் மையவாடிக்கு ெகாண்டு செல்ல வேண்டியுள்ளது. அங்கு பல ஆண்டுகளாக 25 பள்ளிவாசல்களைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். இதனால், அங்கு அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்த்திட ஆனையூர் மல்லிகை நகர் பகுதியில் பொது மயானம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 17 சென்ட் நிலத்தை மையவாடி அமைக்க ஒதுக்கித் தர வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

The post மையவாடிக்கு இடம் தேவை: அமைச்சர்களிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Maiwadi ,Madurai ,Anayur Silayaneri ,Misjithe ,Ibrahim ,Babuji ,Mayiwadi ,Dinakaran ,
× RELATED பொதக்குடி மையவாடியில் மழை நீர் தேங்கி சேதமான சாலை சீரமைக்க வேண்டும்