×

பைக் திருடிய வாலிபர் 5 ஆண்டுக்கு பிறகு கைது

 

சேலம், செப்.11: சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). இவர் 2018ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ளகடை முன்பு நிறுத்திய இவரது பைக் திருடுபோனது. இதுபற்றி செவ்வாய்ப்பேட்டை போலீசில் கார்த்திகேயன் புகார் கொடுத்தார். இந்நிலையில், 5 ஆண்டுக்கு பின், கார்த்திகேயனின் பைக்கை திருடிய வாலிபர் போலீஸ் பிடியில் நேற்று முன்தினம் சிக்கினார்.

அந்த பைக்குடன் சுற்றி திரிந்த போது, சந்தேகத்தின் பேரில் எஸ்.ஐ., ரமேஷ் தலைமையிலான போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கார்த்திகேயனிடமிருந்து திருடி சென்ற பைக் என்பதும், பைக்கை திருடியவர் குகை பஞ்சந்தாங்கி பகுதியை சேர்ந்த கார்த்திக் (27) என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்த ₹50 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை போலீசார் மீட்டனர். பின்னர், கைதான கார்த்திக்கை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பைக் திருடிய வாலிபர் 5 ஆண்டுக்கு பிறகு கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Karthikeyan ,Kumaragiri ,Sannyasigundu, Salem ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு