
பொன்னமராவதி,செப்.11: பொன்னமராவதி அம்மா பூங்காவில் கூடுதல் விளையாட்டு சாதனங்களை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.20லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. பொன்னமராவதி ஓன்றியத்திற்கான அம்மா பூங்கா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் 2016-2017ம் ஆண்டு அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.
இதில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டது. ஜிம், கல் இருக்கைகள், 8வடிவிலான உடற்பயிற்சி தளம், மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நடைபயிற்சி செய்வதற்கு வசதிகள் உள்ளன. இந்த பூங்காவை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கூடுதல் உடற்பயிற்சி கருவிகள் அமைக்கவேண்டும். உடைந்த விளையாட்டு சாதனங்களை சரி செய்ய வேண்டும். மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னமராவதி அம்மா பூங்காவில் கூடுதல் விளையாட்டு சாதனங்கள் மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.