×

உடையார்பாளையம் அருகே விவசாயியிடம் வழிப்பறி வாலிபர் கைது

 

ஜெயங்கொண்டம்,செப்.11: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் மேல தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் கவாஸ்கர் (35). விவசாயி. இவர் நேற்று அரியலூர் செல்வதற்கு டூவீலரில் இடையார்-உடையார்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கவாஸ்கரை வழி மறித்த மர்ம நபர் அவர் சட்டை பையில் இருந்த பணத்தை கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றுள்ளார்.

இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கவாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் கழுமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த ராஜ் (எ) உருளை (44) என்பரை விசாரணை செய்தபோது காவஸ்கரிடம் வழிமறித்து ரூ.200 வழிப்பறி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜ் (எ) உருளையை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post உடையார்பாளையம் அருகே விவசாயியிடம் வழிப்பறி வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Wodiarpalayam ,Jayangondam ,Sundaramurthy ,Gavaskar ,Udayar Mela Street ,Udayarpalayam, Ariyalur District ,Wodeyarpalayam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு