×

பிரசவத்தின் போது இறந்த பெண் உடலை கேட்டு மறியல்

ராமநாதபுரம், செப்.11: ராமநாதபுரத்தில் பிரசவித்த பெண் இறந்ததால் உடலை உடனே வழங்கக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கமுதி அருகே பறையங்குளத்தை சேர்ந்த காளிமுத்து மனைவி சித்ராதேவி(21). கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டு கோவிலாங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சித்ராதேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். சித்ராதேவியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாளை தான் (இன்று) மருத்துவ பரிசோதனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடனே பிரேத பரிசோதனை செய்து தரக்கோரி உறவினர்கள் மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

The post பிரசவத்தின் போது இறந்த பெண் உடலை கேட்டு மறியல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kamudi… ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்