×

லோக் அதாலத்தில் 1,952 வழக்குகளுக்கு தீர்வு

சிவகங்கை, செப்.11:தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் பேரில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் 9 மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் 2ஆயிரம் குற்றவியல் வழக்குகள், 131 செக்மோசடி வழக்குகள், 88 வங்கிக்கடன் வழக்கு, 73வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, 49குடும்ப பிரச்னை வழக்கு, 136சிவில் வழக்கு என மொத்தம் 2ஆயிரத்து 542வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதில் ஆயிரத்து 952 வழக்குகள் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 கோடியே 85லட்சத்து 4ஆயிரத்திற்கு தீர்வு காணப்பட்டது. சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, நீதிபதிகள் பக்தவத்சலு, சரத்ராஜ், பரமேஸ்வரி, சுந்தரராஜ், அனிதாகிருஷ்டி, செல்வம் மற்றும் வழக்கறிஞர் ராம்பிரபாகர் வழக்குகளை விசாரித்தனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் லோக் அதாலத் ஏற்பாடுகளை செய்தனர்.

The post லோக் அதாலத்தில் 1,952 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Athalam ,Sivagangai ,National Law Commission ,State Law Commission ,Dinakaran ,
× RELATED சிவகங்கை நகர் பகுதியில் இடையூறாக...