×

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,747 வழக்குகளுக்கு தீர்வு

 

திருவில்லிபுத்தூர், செப்.11: திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திலகம் தலைமை வகித்தார். இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உட்பட 7998 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 3747 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8,79,32,465 தீர்வாக உத்தரவிடப்பட்டது. ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,747 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Thiruvilliputhur ,Tiruvilliputhur Integrated Court Complex ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி