×

பொதுச் சொத்து சேதம்: பெண் மீது வழக்கு

 

சிவகாசி, செப்.11:சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சியில் உள்ள கட்டளைப்பட்டி கிராமம் முத்துநகர் பகுதியில், ஊராட்சி மன்றம் சார்பில் ரூ.20 லட்சத்தில் தெருக்களில் பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் வசிக்கும் சூரியநாராயணன் மனைவி தனலட்சுமி, இவரது வீட்டின் முன் மேற்கூரை அமைப்பதற்காக தெருவில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்களை சுமார் 50 அடி நீளத்துக்கு பெயர்த்து எடுத்துவிட்டாராம்.

இதையடுத்து, ஊராட்சி செயலர் நாகராஜன், வார்டு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் தனலட்சுமியிடம் இதுபற்றி விளக்கம் கேட்ட போது, அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலர் நகராஜன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரனேரி போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடா்ந்து தனலட்சுமி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பொதுச் சொத்து சேதம்: பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Panchayat Union ,Anaiyur Panchayat ,Muthunagar ,Panchayat Council ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை