×

பட்டாசுகள் பறிமுதல்

 

சிவகாசி, செப்.11: தகர செட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே வெள்ளையாபுரம் கிழக்கு தெருவில் திருத்தங்கல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தகர செட்டில் அனுமதி இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.5 ஆயிரத்து 450 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பட்டாசுகளை பதுக்கிய அதே பகுதியை சேர்ந்த வள்ளிமுத்து (32) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் சிவகாசி திருத்தங்கல் சத்யா நகரை சேர்ந்த பரமசிவம் தனது வீட்டில் அனுமதி இன்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

The post பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி