×

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக தேர்தல் நாளை நடந்தால் கூட அ.தி.மு.க எதிர்கொள்ள தயார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமூக நீதிக்கான நல்ல திட்டங்களை குழி தோண்டி புதைத்து விட்டனர். அதேபோல, எங்களை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் , ஜாதி மதம் இனம் மொழி என எதுவும் கிடையாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா சரியான பாதையில் கட்சியை வழிவகுத்து கொடுத்து இருக்கிறார் அந்த வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம்.

இந்த சனாதனம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் உதயநிதியின் கருத்திற்கு இந்தியா கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என இரண்டு முறை தேர்தல் நடைபெறுவதால் மக்கள் வரி பணம் வீணடிக்க படுகிறது. எனவே, அதிமுகவை பொறுத்தவரை ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும்.அதன்படி, அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் நாளைக்கே தேர்தல் நடந்தாலும் அதிமுக எந்த நிலையிலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்.

The post ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக தேர்தல் நாளை நடந்தால் கூட அ.தி.மு.க எதிர்கொள்ள தயார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : ADMK ,Former minister ,Jayakumar ,Chennai ,AIADMK ,
× RELATED ஜெயக்குமார் ஆரூடம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி