×

கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், திட்டக்குடி மருதத்தூர் கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்று கொண்டிருந்தபோது, கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள கட்டிடத்தின் வெளிப்புற மேற்கூரை எதிர்பாராதவிதமாக ஸ்ரீமுஷ்ணம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரதேவி (15) மீது இடிந்து விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்த சுதந்திரதேவியின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனதுஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

The post கட்டிட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Stalin ,Kumbabishekam ,Madurudathur ,Cuddalore district ,Tadakkudi ,
× RELATED உயிரிழப்பை தடுக்கவே சில இடங்களில்...