×

சாத் பூஜை!: யமுனையில் பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் புனித நீராடிய மக்கள்..!!

டெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் பொங்கி வரும்  ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் மக்கள் சாத் பூஜையை ஒட்டி நீராடி வருகின்றனர். வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சூரியனை வழிபடும் சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டில் சாத் பூஜை இன்று தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தி வருகின்றனர். டெல்லியில் கலிந்தி கஞ்ச் அருகே யமுனை ஆற்றில் ரசாயன நுரை பொங்கி வழிந்தது. இதனை பார்ப்பதற்கே அச்சம் ஏற்பட்ட நிலையில் ரசாயன நுரை பற்றி சற்றும் கவலைப்படாமல் மக்கள் யமுனை நதியில் புனித நீராடினர். சாத் பூஜையை பிகார், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மக்களே பெரும்பாலும் கொண்டாடுகின்றனர். கோவில் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரியனை வழிபாட்டு வருகின்றனர். சாத் பூஜையையொட்டி டெல்லியில் 10ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. …

The post சாத் பூஜை!: யமுனையில் பொங்கி வழியும் ரசாயன நுரையை பொருட்படுத்தாமல் புனித நீராடிய மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : SAD PUJA ,Holy ,Water ,Yamuna Delhi ,Saad Puja ,Yamunai river ,Delhi ,Yamuna ,
× RELATED பிரகாசபுரம் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு