×

ராஜாஜி சாலையில் பரபரப்பு டயர் வெடித்து கார் கவிழ்ந்தது: இரண்டு பேர் உயிர் தப்பினர்

சென்னை: ராஜாஜி சாலையில் டயர் வெடித்து கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 பேர் உயிர் தப்பினர். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று காலை ராஜாஜி சாலையில் கார் ஒன்று வார் மெமோரியல் நோக்கி சென்று கொண்டிருந்தது. காரை ரஞ்சித் என்பவர் ஓட்டினார். அவரது நண்பர் உடனிருந்தார். ராஜாஜி சாலையில் உள்ள நேவல் ஆபீசர் மெஸ் அருகே வரும்போது காரின் இடது பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள நடைபாதையின் தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு தலைகீழாக கவிழ்ந்தது. இதை பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து காரில் சிக்கிய ரஞ்சித் உள்பட 2 பேரை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர்கள் உயிர்தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சித் உள்பட 2 பேரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post ராஜாஜி சாலையில் பரபரப்பு டயர் வெடித்து கார் கவிழ்ந்தது: இரண்டு பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Rajaji Road ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் 150...