- ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்யா வாக்கத்தான்
- சட்டமன்ற உறுப்பினர்
- மேயர்
- தாம்பரம்
- Omcrecentia கல்வி மற்றும் அறக்கட்டளை
- நடைப்பயணம்
- தின மலர்
தாம்பரம்: உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஒம்கிரெசென்ஷியா கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில், வாக்கத்தான் நிகழ்ச்சி நேற்று காலை தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை அருகே வெங்கடேஸ்வரா சாலையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உடல்நலம் மற்றும் ஆரோக்கிய வாக்கத்தானை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் பங்கேற்றவர்கள் தாம்பரம் – தர்காஸ் பிரதான சாலை அருகே வெங்கடேஸ்வரா சாலையில் இருந்து நடந்து சென்று மீஞ்சூர் – வண்டலூர் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலை வழியாக வரதராஜபுரம் பகுதி அருகே உள்ள டோல்கேட் வரை சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் வண்டலூர் – மீஞ்சூர் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலை வழியாக தர்காஸ் பிரதான சாலை வந்து மீண்டும் வெங்கடேஸ்வரா சாலை என சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடந்தனர். இதில் குறுகிய நேரத்தில் இலக்கை அடைந்தவர்களுக்கும், வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் எம்எல்ஏ இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆகியோர் பதக்கங்களை வழங்கி ஊக்குவித்தனர்.
The post உடல்நலத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆரோக்கிய வாக்கத்தான் நிகழ்ச்சி: எம்எல்ஏ, மேயர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.