×

2019ல் நடந்த குண்டுவெடிப்பு சதி குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க குழு: இலங்கை அதிபர்அறிவிப்பு

கொழும்பு: ஈஸ்டர் குண்டுவெடிப்பு சதி குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். 2019ம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின்போது இலங்கையில் 3 கத்தோலிக்க தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 270 பேர் பலியாயினர். இங்கிலாந்தை சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி அண்மையில் ஆவண படம் வௌியிட்டது. அதில் இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியில் அமர செய்யப்பட்ட சதியே ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு காரணம் என தெரிவித்தது.

முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சதி திட்டத்தை அரங்கேற்றியதாகவும் அதில் இடம்பெற்றுள்ளது. சேனல் 4 ஆவணப்படத்தின் கருத்துகளுக்கு மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் சதி திட்டம் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று தெரிவித்தார்.

 

The post 2019ல் நடந்த குண்டுவெடிப்பு சதி குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க குழு: இலங்கை அதிபர்அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,Supreme Court ,Easter ,Bombing Committee ,Dinakaran ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...